இன்றைய (11-05-2023) நட்சத்திர பலன்கள் தெரிந்து கொள்வோம்:
அஸ்வினி
மனதில் புதுவிதமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் உண்டாகும்.
பரணி
கலை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.
கார்த்திகை
சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும்.
ரோகிணி
வர்த்தகம் சார்ந்த பணிகளில் லாபம் மேம்படும்.
மிருகசீரிஷம்
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும்.
திருவாதிரை
எதிர்பாராத சில வருமான வாய்ப்புகள் சாதகமாகும்.
புனர்பூசம்
ஊக்கம் மற்றும் ஓய்வூதியம் கிடைப்பதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். பிறமொழி பேசும் மக்களின் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
பூசம்
குடும்ப உறுப்பினர்களிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
ஆயில்யம்
செய்கின்ற செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
மகம்
வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும்.
பூரம்
சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பமும், விரயமும் உண்டாகும்.
உத்திரம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும்.
ஹஸ்தம்
உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லவும்.
சித்திரை
கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். நண்பர்களின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
சுவாதி
எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றங்கள் உண்டாகும்.
விசாகம்
சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு கற்பனை திறன் மேம்படும்.
அனுசம்
மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள்.
கேட்டை
சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும்.
மூலம்
எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும்.
பூராடம்
நெருக்கமானவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.
உத்திராடம்
பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.
திருவோணம்
விவசாய பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும்.
அவிட்டம்
காப்பீடு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும்.
சதயம்
திட்டமிட்ட பணிகள் சிறு சிறு அலைச்சல்களுக்கு பின் நிறைவேறும்.
பூரட்டாதி
புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மேம்படும்.
உத்திரட்டாதி
வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் சாதகமாகும்.
ரேவதி
தனவரவுகளின் மூலம் கடன் சார்ந்த இன்னல்கள் குறையும்.