
திருச்சி கல்லூரி வளாகத்தில்
பாம்பு கடித்து வடநாட்டு என்ஜினீயர் பலி.
மேற்கு வங்காள மாநிலம் ஜல்பாய் கைசந்துபாரா பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் பர்மான் (வயது 21). டிப்ளமோ இன்ஜினியரிங் படித்துள்ள இந்த வாலிபர் திருச்சி துவாக்குடியில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
தற்போது அந்த கட்டுமான நிறுவனம் துவாக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் கடந்த ஒரு மாதமாக கட்டுமான பணிகளை செய்து வருகிறது.
இதில் ராஜேஷ் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 28ம் தேதி அந்தக் கல்லூரி வளாகத்தில் அவரை எதிர்பாராத விதமாக பாம்பு கடித்து விட்டது. பின்னர் சக தொழிலாளர்கள் அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் ராஜேஷ் சிகிச்சை பல அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மேற்கண்ட நிறுவனத்தின் இன்னொரு இன்ஜினியர் தருண் துவாக்குடி போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.