Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி:திமுக தொண்டரின் புகார் எதிரொலி.திமுகவின் நூறடி உயர கொடிமரத்தை அகற்ற ஹை கோர்ட் உத்தரவு.

0

 

திருச்சி அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை தலைவர் குருராஜ் (இவர் திமுகவில் உறுப்பினராக உள்ளார்).

இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்து இருந்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் திருச்சி டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை தலைவராக உள்ளேன். கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராகவும் உள்ளேன்.

திருச்சி, திருவெறும்பூர் குண்டூர் கிராமம் அருகே புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை. ஓ.எப்.டி வளைவு அருகில் 100 அடி உயர ராட்ச திமுக கொடி கம்பம் வைக்கப்பட்டுள்ளது .
இந்த இடம் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடம்.

மேலும், இங்கு பேருந்து நிறுத்தம் இருப்பதால் பொதுமக்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் அங்கு வந்து செல்வார்கள். மழை, புயலின் போது கொடி கம்பம் சாய்ந்தால் விபத்து ஏற்படும். மேலும் கொடி கம்பம் அரசு புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ளது.

அரசு புறம்போக்கு நிலத்தில் ஒரு கட்சி கொடி அமைப்பது என்பது சட்டத்திற்கு புறம்பான செயலாகும் .

நானும் இதே கட்சியை சேர்ந்தவனாக இருந்தாலும் , இவ்வாறு அபாயகரமான கொடி கம்பம் அமைத்ததில் எனக்கு உடன்பாடு இல்லை . கடந்த 26.03.2023 அன்று இந்த இடத்தில் திமுக கொடி நிறுவிவிட்டனர் . எனவே , திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை , ஓஎப்டி வளைவு அருகில் அரசு புறம் போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர ராட்ச திமுக கொடி கம்பத்தை அகற்றி பொதுமக்கள் பயமின்றி நடமாட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் அரசு புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கொடி கம்பத்தை 15 நாட்களில் அகற்ற , திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

இது குறித்த அறிக்கையை ஜூன் 1ஆம் தேதி தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.