Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: அமைச்சர் கே.என்.நேரு நிகழ்ச்சியில் பரபரப்பு. பெரும் விபத்து தவிர்ப்பு.

0

'- Advertisement -

 

Ad banner

அமைச்சர் கே என் நேரு திருச்சி மாநகராட்சி வாயிலில் மாநகராட்சி பணிக்காக 10 வாகனங்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

அமைச்சர் வரும் சிறிது நேரத்துக்கு முன் மாநகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வயர்லெஸ் டவர் முறிந்து புகை மூட்டத்துடன், பயங்கர சத்தத்துடன் சாலை நடுவே உள்ள மின் கம்பிகள் மீது கீழே விழுந்தது.

கே.என்.நேரு வருவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன் இந்த நிகழ்வு ஏற்பட்டது.அமைச்சர் வந்தபின் இது ஏற்பட்டு இருந்தால் பெரும் விபத்து நடந்திருக்கும்.

அமைச்சர் கே.என்.நேரு பாதுகாப்பிற்காக வந்த காவலர்கள் உடனடியாக சாலை நடுவே தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் அப்பகுதி வழியே செல்லாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவ்வளியே வரும் பொது மக்களுக்கு மாற்று பாதையில் செல்ல அறிவித்தப்பட்டுள்ளது.

இந்த வயலர்ஸ் டவர் முறிந்து கீழே விழுந்த போது, மின்மாற்றின் அருகில் இருந்த மின் கம்பிகளுக்கிடையே டவரின் உடைந்த பகுதிகள் சிக்கிக் கொண்டன. இதனால் அப்பகுதியும் முழுவதும் மின் இணைப்பு தடைபட்டது.

இதுவே அருகில் இருந்த மின் மாற்றி மீது டவர் விழுந்திருந்தாலும் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.