லால்குடி அருகே உள்ள அழுந்தலைப்பூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகள் அபிராமி (வயது 19).
இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில்
பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

அவருக்கு பல்வேறு உடல் நலப் பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தது. பெற்றோர் மகளை பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தபோதிலும் பூரண குணமடைய முடியவில்லை. படிப்பிலும் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை.
இதனால் அபிராமி கவலையில் ஆழ்ந்து வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்து எடுத்து குடித்து விட்டார்.
உடனடியாக பெற்றோர் மகளை மீட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அபிராமி உயிர் பிரிந்தது. இதுகுறித்து அவரது தாயார் பூங்கொடி சிறுகனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.