Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழக இளைஞர்கள் யுவ சங்கம் கட்டம் 2 மூலம் ஐஐடி பாட்னா செல்ல அழைப்பு.

0

 

 

யுவ சங்கம் 2-ம் கட்டத்தின் மூலம்

ஐ.ஐ.டி. பாட்னாவுக்கு செல்ல தமிழக
இளைஞர்களுக்கு யுவ சங்கம் இரண்டாம் கட்டம்.

யுவ சங்கம் என்பது மக்களுக்கு இடையேயான தொடர்பை
வலுப்படுத்தும் மத்திய அரசின் திட்டமாகும். உயர்கல்வி
நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் ஒரு மாநிலத்தில்
இருந்து மற்ற மாநிலங்களுக்கு 5 நாட்களுக்கு சுற்றுப்பயணம்
மேற்கொண்டு வளர்ச்சி அடையாளங்கள், சமீபத்திய சாதனைகள் மற்றும் உள்ளூர் இளைஞர்களுடன் தொடர்பு
கொள்வது யுவ சங்கத்தின் நோக்கம் ஆகும். சுற்றுலா, பாரம்பரியங்கள், வளர்ச்சி, மக்கள் தொடர்பு, தொழில்நுட்பம்
ஆகிய 5 பரிமாணங்களை பற்றி இளைஞர்கள் கற்று கொள்கிறார்கள்.

யுவசங்கம் கட்டம்-1 பிப்ரவரியில் தொடங்கப்
பட்டு வெற்றியை பெற்றது. இந்தநிலையில் யுவ சங்கம் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணங்கள் மே மாதம் திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய தொழில்நுட்ப கழகம் திருச்சி, தமிழ்நாடு,
பீகாரில் உள்ள இந்திய தொழில்நுட்பக்கழகம் பாட்னாவுக்கு
செல்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் நாட்டு நலப்பணித்திட்டம், நேருயுவகேந்திரா, தன்னார்வ தொண்டர்கள், தொழில்,
சுயதொழில் செய்பவர்கள் போன்ற 18 முதல் 30 வயதுக்குட்பட்ட
தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து இளைஞர்களும் யுவசங்கம் கட்டம் 2-ல் பதிவு செய்யலாம்.

இளைஞர்கள் 4
ஒருங்கிணைப்பாளர்களுடன் 45 பேர் கொண்டகுழுக்களாக
பயணம் செய்வார்கள்.

அவர்களது சுற்றுப்பயண செலவுகள்
அரசாங்கத்தால் நிதியுதவி செய்யப்படுகிறது.

https://ebsb.
aicte-india.org. என்ற இணையதளத்தில் வருகிற 9-ந் தேதி
யுடன் பதிவு முடிவடைகிறது.

Leave A Reply

Your email address will not be published.