Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் டிஜிட்டல் வர்த்தக பண பரிமாற்றம் குறித்த தேசிய கருத்தரங்கம்.

0

 

திருச்சி ஜோசப் கல்லூரியில்
டிஜிட்டல் வர்த்தக பண பரிமாற்றம் குறித்த தேசிய கருத்தரங்கம்

பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வம் பங்கேற்பு.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பாக டிஜிட்டல் வர்த்தக பணப் பரிமாற்றம் மற்றும் வங்கி பயன்பாட்டில் சைபர் பாதுகாப்பு என்னும் தலைப்பில் தேசிய கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் பாரதிதாசன் பல்கலைக் கழக துணை வேந்தர் முனைவர் செல்வம் டிஜிட்டல் பரிவர்த்தக முறைகளைப் பற்றி அனைவரும் தெளிவாக தெரிந்து கொண்டு மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று தனது சிறப்புரையில் கூறினார்.

கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை முனைவர் ஆரோக்கியசாமி சேவியர் தொடக்கவுரையாற்றினார். கல்லூரியின் செயலர் அருட்தந்தை முனைவர் அமல் பாராட்டுரை வழங்கினார். இரண்டு மற்றும் மூன்றாவது அமர்வுகளில் இந்தியன் இன்ஸ்டிடியூட ஆப் பேங்கர்ஸ் அசோசியேட் மேலாளர் ரோனக், பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளர் முருகன், பரணிதரன் மற்றும் ஜி எஸ் டி இணை இயக்குநர் ரத்தினக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்;

வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் அலெக்சாண்டர் பிரவின் துரை வரவேற்றார். முடிவில் வணிகவியல் பேராசிரியர் அருட் தந்தை பெர்க்மான்ஸ் நன்றி கூறினார். வணிகவியல் துறையின் பேராசிரியர்களான முனைவர் ஜான், முனைவர் சகாயராஜ், அலெக்ஸாண்டர் ஆகியோர் இந்நிகழ்ச்சியை எற்பாடு செய்திருந்தனர். வணிகவியல் துறை மாணாக்கர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்

Leave A Reply

Your email address will not be published.