Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஸ்ரீ அங்காள ஈஸ்வரி அருள்மிகு ஸ்ரீபீளிக்கான் முனீஸ்வரர் கோயில் திருவிழாவையொட்டி பால்குடம்,அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் வழிபாடு.

0

 

திருச்சி ஸ்ரீஅங்காள ஈஸ்வரி, அருள்மிகு ஸ்ரீபீளிக்கான் முனீஸ்வரர் ஆலயத்தின் திருவிழாவையொட்டி 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்துவந்து வழிபாடு.

திருச்சி மாநகர், விமான நிலையம்,காமராஜ் நகரில் (வடபுறம்) எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீஅங்காள ஈஸ்வரி, அருள்மிகு ஸ்ரீபீளிக்கான் முனீஸ்வரர் ஆலயத்தின் 40ம் ஆண்டு திருவிழாவானது கடந்த 24ம் தேதியன்று காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றுதலுடன் தொடங்கியது.

தொடர்ந்து அம்பாள் அக்னிகரகத்துடன் கிராமங்கள் தோறும் வலம் வருதல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து அம்பாள் சக்தி கரகத்துடன் பால்குடம் எடுத்து வரும் வைபவம் நடைபெற்றது.

கொட்டப்பட்டு கருப்பண்ணசுவாமி ஆலயத்திலிருந்து 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி மற்றும் பால்குடம், காவடி எடுத்து வந்து நகர்புறப்பகுதிகளில் ஊர்வலமாக வலம் வந்தனர். பின்னர் ஆலயத்திற்கு வந்து அங்காள ஈஸ்வரிக்கு பால் அபிஷேகம் செய்து பக்திபரவசத்துடன் வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை பீளிக்கான் முனீஸ்வரர் கோவில் அறங்காவலர் எஸ்.பி.என்.பெருமாள் சாமி,தலைவர் துரைசாமி, பொருளாளர் வீரக்குமார், இணை செயலாளர் ராமசாமி, பொருளாளர் துரைராஜ், துணைத்தலைவர் பாஸ்கரன்,கணக்கு தணிக்கையாளர் பழனி துணை செயலாளர்கள் கிருஷ்ணசாமி, வேலுச்சாமி,ஆலய நிர்வாக குழு, ஆலய பாதுகாப்பு குழு மற்றும் கிராமவாசிகள் மேற்கொண்டிருந்தனர்.

வரும் ஞாயிற்றுக்கிழமை எப்ரல் 2ம் தேதி மாலை ஆறு மணி அளவில் மாபெரும் தீமிதி மகா உற்சவம் நடைபெற உள்ளது.

ஸ்ரீ அங்காளஈஸ்வரி ஸ்ரீ பீலிக்கான் முனீஸ்வரர்:

ஒரு ஆலயத்தில் சிறப்புகளை தன் தாய் மொழியில் கூறுவதுதான் சிறப்பு .பர்மா நாட்டின் பீலிகான் என்ற பகுதியை சேர்ந்த தமிழர்களின், இங்குள்ள பர்மாவை சேர்ந்த தமிழர்களின் இஷ்ட தெய்வமாக காவல் தெய்வமாக வணக்க பட்டு வரும் பாரம்பரியமிக்க புனித ஸ்தலம்.

இங்கு முனீஸ்வரன் & அங்காள ஈஸ்வரி மூலவர்களாகவும் மதுரைவீரன், சங்கிலி கருப்பு, நாக கன்னி தெய்வங்களும் உள்ளனர். இந்த திருக்கோவிலின் சிறப்பு என்னவென்றால் இந்த தெய்வங்களுக்கெல்லாம் பர்மா நாட்டின் ஆலயத்தின் காவலாளியாக இருந்த பூச்சி என்பவர் அந்த கோவிலின் காவல் தெய்வமாக சிலையாய் உருமாறியதாக புராணங்கள் உள்ளதாக நம்ப படுகிறது .

பூச்சி தாத்தா என்று இங்குள்ள மக்களால் வணக்க படும் பூச்சி ஐய்யா முன்னோடியான் என்கின்ற மனித தெய்வம் இங்குள்ள அணைத்து தெய்வங்களின் காவலாக கோவிலின் வாசலின் குடி கொண்டுள்ளார். இவருக்கென்று இந்த கோவிலில் ஒரு தனி வரலாறு உள்ளதாக கூறப்படுகிறது. கையில் தடியுடன் காவலுக்கு நிற்கும் அவரை காணும் போதே உண்மையில் மெய் சிலிர்க்கிறது.

Leave A Reply

Your email address will not be published.