Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் இஸ்லாமியர்களை உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசுக்கு காயல் அப்பாஸ் வலியுறுத்தல்.

0

'- Advertisement -

 

சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளின் மரணம் தான் விடுதலையா ? காயல் அப்பாஸ் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி.

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

20 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை மத்திய சிறையில் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அபுதாஹீர்
பரோலில் வெளியில் வந்து இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என்கிற செய்தி வேதனையை அளிக்கிறது.

அபுதாஹீரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக தெரிவித்து கொள்கிறோம் .

10 ஆண்டுக்கும் மேலாக தமிழக சிறைகளில் இருக்கும் அப்பாவி இஸ்லாமிய சிறைவாசிகளை கருணையின் அடிப்படை விடுதலை செய்ய கோரி அரசுகளுக்கு தொடர்ந்து பல முறை கோரிக்கைகளை முன் வைத்து வருகிறோம், ஆனால் இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை சம்பந்தமான கோரிக்கைகளுக்கு ஆளும் அரசுகள் செவி சாய்ப்பது இல்லை.

20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் கடுமையான நோயால் பாதிக்க பட்டு இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மறு வாழ்வு கொடுத்து விடுதலை செய்ய தமிழக அரசு முன் வராமல் மெளனம் காப்பது ஏன்? சிறைவாசிகள் இஸ்லாமியர்கள் என்பதற்க்காகவா ?

தமிழக சிறைகளில் வாடும் இஸ்லாமிய சிறை வாசிகளின் விடுதலை மட்டும் தொடர்ந்து கேள்வி குறியாகவே இருந்து வருகிறது. ஆகவே இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு கருணையின் அடிப்படையில் அரசியல் சாசன பிரிவு 161ன் படியும் விடுதலை செய்ய காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு க ஸ்டாலினை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.