Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி:தேசிய மக்கள் நீதிமன்றத்தில் இன்று 4000 வழக்குகளுக்கு தீர்வு.

0

'- Advertisement -

 

தேசியமக்கள் நீதிமன்றத்தில்
வழக்குகளுக்கு உடனடி தீர்வு.

முதன்மை நீதிபதி கே.பாபு
ஆணைகளை வழங்கினார்.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், மூன்றாவது கூடுதல் சார்பு நீதிபதியுமான எஸ்.சோமசுந்தரம் வரவேற்றுப் பேசினார்.
மாவட்ட முதன்மை நீதிபதி கே.பாபு தலைமை தாங்கினார்.

மாவட்ட கூடுதல் இரண்டாவது கூடுதல் நீதிபதி கே.ஜெயக்குமார், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி கே.கருணாநிதி, மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிபதி பி.தங்கவேல், முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் பி.சாந்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
முடிவில் மூன்றாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் கே.ஆர்.பாலாஜி நன்றி கூறினார்.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், தொழிலாளர் இழப்பீட்டு வழக்குகள், குடும்பநல வழக்குகள், இடப்பிரச்சினை சம்பந்தமான வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வகையான 8, 476 வழக்குகள் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் இரு தரப்பினரையும் நீதிபதிகள் அழைத்துப் பேசி சமரசம் செய்து சுமார் 4000 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
அதற்கான ஆணைகளை மாவட்ட முதன்மை நீதிபதி கே.பாபு வழங்கினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.