Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்தியா ஆஸ்திரேலியா முதலாவது டெஸ்ட் இரண்டரை நாளில் முடிவுக்கு வந்தது.இன்னிங்ஸ் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.

0

 

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாளிலேயே 177 அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கி விளையாடியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து நேற்று நடந்த 2-ம் நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ரோகித் சர்மா 120 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.

ஜடேஜா, அக்சர் பட்டேல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜடேஜா 70 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனாலும், அக்சர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 84 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். இதனால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை விட 223 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், 223 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. உஸ்மன் குவாஜா, டேவிட் வார்னர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால், முதல் இன்னிங்சை போல 2வது இன்னிங்சிலும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அஸ்வின் பந்துவீச்சில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் கவாஜா 5 ரன்னில் அவுட் ஆனார். அடுத்துவந்த மார்னஸ் லபுஷேன் 17 ரன் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான வார்னர் 10 ரன் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்துவந்த மெட் ரென்சா 2 ரன்னில் அஸ்வின் பந்து வீச்சில் அவுட் ஆனார். தொடர்ந்து ஹேண்ட்ஸ்கோம்ப் 6 ரன்களிலும் , அலெக்ஸ் கேரி 10ரன்களிலும் அஸ்வின் சூழல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கேப்டன் கம்மின்ஸ் 1ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 32.1 ஓவர்களில் 91ரன்களுக்கு 10 விக்கெட் இழந்து ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 5 விக்கெட் , ஜடேஜா 2 விக்கெட் ,முகமது ஷமி 2 விக்கெட், அக்சர் படேல் 1 விக்கெட் வீழ்த்தினர்.
இப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த இரு அணிகளுக்கிடையே நடைபெற உள்ள இரண்டாவது போட்டி டெல்லியில் வரும் (17.2.23) வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.