Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கடைகளை உடைத்து திருடிய சிறுவன் உட்பட மூன்று பேர் கைது.

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி அரியமங்கலத்தில் போஸ்ட் ஆபீஸ் மற்றும் ஆயில் கடையின் பூட்டை உடைத்து திருடிய 2 வாலிபர்கள் மற்றும் ஒரு சிறுவன் கைது

TVK ad

திருச்சி அரியமங்கலம் லட்சுமிபுரம் தொழிற்பேட்டை பகுதியில் கடந்த மாதம் 30 ஆம் தேதி போஸ்ட் ஆபீஸ் மற்றும் ஆயில் கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் மற்றும் பணம் திருட்டு போனது. இதில் போஸ்ட் ஆபீஸில் 5 செல்போன்களும் 3500 ரூபாய் பணமும் திருட்டுப் போனது. ஆயில் கடையில் 1400 ரூபாய் பணம் திருட்டு போனது.

இது குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் போஸ்ட் ஆபீஸ் மற்றும் ஆயில் கடையில் திருடிய அரியமங்கலம் உக்கடை பகுதியை சேர்ந்த ரஞ்சித் வயது (வயது 21) அரியமங்கலம் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த பிரவீன் ராஜ் (வயது19) மேலும் இந்த திருட்டில் ஈடுபட்ட ஒரு சிறுவனையும் இன்ஸ்பெக்டர் திருவனந்தம் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

ரஞ்சித், பிரவீன் ராஜ் ஆகிய இருவரையும் திருச்சி 6 வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.