தென்னூர் அண்ணா நகரில்
பார் சூப்பர்வைசரை தாக்கிய 3 பேர் கைது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பெரிய தலைவாசல் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 34 ).இவர் திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள மதுக்கடை பாரில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பார் அருகே நின்று தனபால், விக்னேஷ் ஆகியோரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
கடந்த ஐந்தாம் தேதி பார் விடுமுறை ஆகும். அப்போது அங்கு வந்த சிலர் வசந்த குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி, பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் வசந்தகுமார், விக்னேஷ் ,தனபால் ஆகியோர் காயம் அடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் தில்லை நகர் போலீசார் வழக்குப்பதிந்து கார்த்தி, ஆனந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். ராஜவேல் அஜித் ஆகிய இரண்டு பேரை தேடி வருகின்றனர்.