திருச்சி காந்தி மார்க்கெட் தரைக்கடை, நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்க கூட்டம்.
புதிய நிர்வாகிகள் தேர்வு.
திருச்சி காந்தி மார்க்கெட் மாநகராட்சி அனுமதி பெற்ற தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமைசங்கத்தின் 23-ஆம் ஆண்டு துவக்க விழா தலைவர் கருப்பையா தலைமையில் திருச்சியில்நடந்தது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில்தலைவராக யு.எஸ்.கருப்பையா, எம்.கே.எம்.காதர் மைதீன், பொருளாளராக ஏ.எம்.பி.அப்துல்ஹக்கீம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து சங்க ஆலோசகர்கள், துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள் ,
கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அனைத்து உறுப்பினர்களும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.