மணப்பாறை வையம்பட்டியில்
சூப்பர் மார்க்கெட் பெண் ஊழியர் திடீர் மாயம்.
திருச்சி மணப்பாறை கருங்குளம் கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிங்கராஜ். இவரது மகள் சகாய கவிதா (வயது 19).
இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வையம்பட்டியில் உள்ள ஒரு தனியார் சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வழக்கம்போல் வீட்டிலிருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மகளை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.
இதில் அவர் காதல் வலையில் சிக்கி கருங்குளம் பகுதியில் சேர்ந்த ஒரு இளைஞருடன் ஓட்டம் பிடித்து இருக்கலாம் என தெரியவந்தது. இது தொடர்பாக மாயமான இளம் பெண்ணின் தாயார் வயலட் சந்திர மேரி வையம்பட்டி போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சகாய கவிதாவை தேடி வருகின்றனர்.

