Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கோயில் கோபுரத்தில் மைக் செட் கட்டிய நபர் தவறி விழுந்தவர் சாவு.

0

'- Advertisement -

திருச்சி கோவில் விழாவுக்கு மைக் செட் கட்டியவர் கோபுரத்திலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார் .

Ad banner

இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

திருச்சி மேல அம்பிகாபுரம் அண்ணா நகர் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் வீராசாமி (வயது 35). சொந்தமாக சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிறார். ஒர் வேனும் வைத்துள்ளார். இந்நிலையில் திருச்சி மேல அம்பிகாபுரம் கலைவாணர் தெருவில் உள்ள முருகன் கோவில் மார்கழி விழாவுக்காக மைக் செட் கட்டிக் கொண்டிருந்தார். அப்போது கோபுரத்திலிருந்து வீராச்சாமி தவறி கீழே விழுந்தார்.இதில் காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அரியமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுசீலா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். வீராசாமிக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிறது. மீனாட்சி என்ற மனைவியும், சுஜித் என்ற மகனும், சாதனா என்ற மகளும் உள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.