திருச்சி மாநகராட்சி மண்டலம் 3ல் உள்ள துப்புரவு பணியாளர்களுக்கு புதிய சீருடைகள் மற்றும் காப்பீடு.அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
திருச்சி மாநகராட்சி மண்டலம் 3 ல் உள்ள துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் ஆயுள் காப்பீடு பதிவு செய்த ஆவணங்கள் உள்ளிட்டவைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
திருச்சி மாநகராட்சி, 3 ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட 249 நிரந்தர துப்புரவுப் பணியாளர்களுக்கு புதிய சீருடைகள், துப்புரவு சுய உதவி குழுவைச் சேர்ந்த 50 பேருக்கு பரோடா வங்கியில் ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீடு பதிவு செய்த ஆவணங்கள், சிறுசேமிப்பு கணக்கு தொடங்கப்பட்ட புத்தகங்கள் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி 3 ஆவது மண்டலத் தலைவர் மு. மதிவாணன் தலைமை வகித்தார். இணை ஆணையர் தயாநிதி முன்னிலை வகித்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, சீருடைகள், வங்கி கணக்குப் புத்தகங்கள் மற்றும் காப்பீட்டு ஆவணங்கள் உள்ளிட்டவைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி பொது சுகாதார நிலைக்குழு தலைவர் நீலமேகம் ,உதவி செயற்பொறியாளர், இளம் பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.