திருச்சியில் விமானத்துக்குள் கிடந்த
310 கிராம் தங்க நகை பறிமுதல்.திருச்சியில் விமான இருக்கைக்கு பின் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ. 17.07 லட்சம் மதிப்பிலான தங்க நகையை சுஙக்தத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று காலை சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் வந்து சேர்ந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர்,
விமான நிறுவன பணியாளர்கள் விமானத்தை கண்காணித்த போது, விமான இருக்கைக்கு பின் ஒரு பொட்டலம் இருப்பது தெரியவந்தது.அதை எடுத்துப் பார்த்தபோது, அதில், 310 கிராம் எடையிலான முற்றுப்பெறாத தங்க சங்கிலி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 17.07 லட்சமாகும்.