Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் விதிகளை மீறி பயன்படுத்திய 27 க்கும் மேற்பட்ட எடை இயந்திரங்கள் பறிமுதல்.தொழிலாளர் நலத் துறையினர் அதிரடி நடவடிக்கை.

0

திருச்சியில் தொழிலாளர் நலத்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், விதிகளை மீறி பயன்படுத்திய 27 க்கும் மேற்பட்ட எடை இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நுகர்வோர் நல அமைப்பு அளித்த புகாரின் அடிப்படையில், திருச்சியில் இறைச்சி விற்பனை கூடங்களில் பயன்படுத்தபடும் எடையளவு இயந்திரங்கள் விதிமுறைகளின் படி பயன்படுத்தப்படுகிறதா? மேலும் தராசுகள் சரியாக எடை காண்பிக்கிறதா ? அவை ஆண்டுக்கு ஒரு முறை சரிபார்க்கப்பட்டு அரசு முத்திரை இடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

திருச்சி, தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வர்கள் லட்சுமி,முத்திரை ஆய்வர்கள் குணசீலன்,கெளரி, ஜெகதீசன் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர்களான வெங்கடேசன், ராஜேந்திரன், அகஸ்டின், பாலசுப்ரமணியன், கார்த்திகேயன், பழனியம்மாள் உள்ளிட்ட தொழிலாளர் நலத்துறையினர்,

திருச்சி பொன்மலை வாரச்சந்தை, சுப்பிரமணியபுரம், டிவிஎஸ் டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், முத்திரையிடப்படாத 27 மின்னணு தராசுகள், 3 மேடை தராசுகள், 2 விட்ட தராசுகள் மற்றும் அரசு முத்திரை இல்லாமல் வணிகர்கள் பயன்படுத்திய 15 இரும்பு எடைக்கற்கள் ஆகியன கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், மறுமுத்திரையிடாமல் தராசு மற்றும் எடைக்கற்களை பயன்படுத்திய இறைச்சிக் கடைகளின் உரிமையார்களுக்கு தலா ரூ.5000 வீதம் 5 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அனைத்து வணிகர்களும் தங்களது வணிக பயன்பாட்டில் உள்ள எடையளவு மின்னணு இயந்திரங்களை ஆண்டுக்கு ஒரு முறை மறுமுத்திரையிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.