Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வினாத்தாளுக்கு கட்டாய கட்டணத்தை ரத்து செய்ய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.

0

அரசு பள்ளி மாணவர்களின் வினாத்தாள் கட்டாய கட்டண வசூலை ரத்து
செய்ய வேண்டும்,
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் சு. குணசேகரன், பொதுச் செயலாளர் முத்துசாமி, பொருளாளர் சே. நீலகண்டன் ஆகியோர் விடுத்துள்ள அறிவுறுத்தல் கூறியிருப்பதாவது;-

தமிழக அரசு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் முற்றிலும் இலவசக் கல்வியை அளித்து வருகின்றன.
இதை ஒரு கொள்கையாகவே அரசு பின்பற்றி வருகிறது.

மேலும் மாணவர்கள் பணம் இல்லாததால் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு விலையில்லா பாடநூல், குறிப்பேடுகள், சீருடை, காலணி, புத்தகப்பை, மடிக்கணினி, மிதிவண்டி, கணித உபகரணங்கள் என 14க்கும் மேற்பட்ட நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஏதேனும் கட்டணமும் மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி வசூலிக்கப்படுவதில்லை
. கட்டண ரசீதே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மயிலாடுதுறை தொடக்க கல்வி அலுவலர் நேற்றைய தினம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களிடமும் தேர்வுக்கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மூன்று பருவங்களாக தேர்வுகள் நடைபெறுவதால் இரண்டாம் பருவத் தேர்வுக்கு ஒரு மாணவருக்கு ₹40 வீதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இங்கு செயல்படும் திறனிலேயே குறைந்த எண்ணிக்கையில் வாங்குபவர்களுக்கே கேள்வித்தாள் ரூ.6க்கு கிடைக்கிறது.

எனவே அரசு கொள்கைக்கு முரண்பட்ட இந்த உத்தரவை மயிலாடுதுறை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ரத்து செய்ய வேண்டும்.

மேலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதற்கான கேள்விகளை இலவசமாக வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.