Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த பட்டியலில் இருந்து முக்கிய வீரர்கள் நீக்கம்?

0

இந்திய கிரிக்கெட் வீரர்கள் 4 வகையாக தரம் பிரித்து ஒப்பந்தம் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் ஆண்டு ஊதியம் வழங்கப்ட்டு வருகிறது.

இதன்படி ‘ஏ பிளஸ்’ பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ. 7 கோடி, ‘ஏ’ பிரிவு வீரர்களுக்கு ரூ.5 கோடி, ‘பி’ பிரிவு வீரர்களுக்கு ரூ.3 கோடி, ‘சி’ பிரிவு வீரர்களுக்கு ரூ.1 கோடி ஊதியமாக அளிக்கப்படுகிறது.

அடுத்த சீசனுக்கான வீரர்களின் ஒப்பந்த பட்டியல் வருகிற 21-ந்தேதி நடக்கும் கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட குழு கூட்டத்தில் இறுதி செய்யப்படுகிறது.
இதில் சில அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய 20 ஓவர் அணியின் வருங்கால கேப்டன் என்று அடையாளம் காணப்பட்டுள்ள ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா சி பிரிவில் இருந்து குறைந்தது பி கிரேடுக்கு தரம் உயர்த்தப்படுகிறார். முன்னாள் துணை கேப்டன் ரஹானே, மூத்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா ஆகியோர் டெஸ்ட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டனர். இதனால் அவர்கள் மூவரும் ஒப்பந்தப்பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

அதே சமயம் 20 ஓவர் போட்டியின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் கடந்த ஓராண்டாக அதிரடியில் வெளுத்து கட்டுகிறார். இதனால் அவர் ‘சி’யில் இருந்து ‘பி’ அல்லது ‘ஏ ‘ பிரிவுக்கு மாற்றப்படுவார் என்று தெரிகிறது. இதே போல் சுப்மான் கில் ‘சி’ இருந்து ‘பி’ பிரிவுக்கு வருகிறார்.

சமீபத்தில் ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த இஷான் கிஷன் ஒப்பந்த பட்டியலில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

Leave A Reply

Your email address will not be published.