Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சி 16 வது வார்டு கவுன்சிலர் அலுவலகத்தை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

0

'- Advertisement -

திருச்சி மாநகராட்சி 16-வது வார்டு கவுன்சிலர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திறந்துவைத்தார்.

Ad banner

திருச்சி மாநகராட்சி 16-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.மதிவாணன் அலுவலம் மற்றும் வார்டு மக்கள் அரசு சான்றிதழ் பெற இ-சேவை மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
‘ மண்டல தலைவரும், 16- வது வார்டு மாமன்ற உறுப்பினருமான மதிவாணன் முன்னிலை வகித்தார்.

 

TVK ad


தமிழக பள்ளிகல்வி துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கவுன்சிலர் அலுவலகம் மற்றும் இ.சேவை மையத்தை திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், வண்ணை அரங்கநாதன், பகுதி கழகச் செயலாளர்கள், வட்ட கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் திரளாக
கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.