Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருவெறும்பூர், பொன்மலை பகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.திருச்சி மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்றது.

0

'- Advertisement -

 

Ad banner

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கினங்க..

அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்திற்க்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பேரூராட்சி, மற்றும் பகுதி கழகங்களில் நடைபெறவுள்ள
18 மாத கால விடியா ஆட்சியில் மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட செயல்களால் மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்ட கூட்டத்தினை சிறப்பாக நடத்துவது குறித்த

அரியமங்கலம் பகுதி மற்றும் திருவெறும்பூர் பகுதி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம்,திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும் பகுதி செயலாளர்கள் தண்டபாணி, பாஸ்கர் என்கிற கோபால்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் சாந்தி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் பாஸ்கர், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சுரேஷ்குமார், வட்டக் கழக செயலாளர்கள் தெய்வமணிகண்டன், சங்கர், மணி, சத்தியசீலன், சோமசுந்தரம், வெங்கடேசன், சரவணன்,ரவி, அபிமன்யூ, ரோஷன், மற்றும் திருவெறும்பூர் பகுதி வட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.