Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மொராய்ஸ் சிட்டி சார்பில் போதை விழிப்புணர்வு மாரத்தான்.2500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சியில் நடைபெற்ற மொராய்ஸ்சிட்டி மாரத்தான் ஓட்டத்தில் 2,500 மாணவ மாணவிகள் பங்கேற்பு.

திருச்சியில் போதை விழிப்புணர்வை வலியுறுத்தி நடைபெற்ற மொராய்சிட்டி மாரத்தான் ஓட்டத்தில் 2,500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

திருச்சியை போதையில்லா மாநகரமாக உருவாக்குவதை வலியுறுத்தி மாரத்தான் போட்டி முதலாவது பதிப்பு இன்று நடைபெற்றது.


திருச்சி மாநகர காவல் துறையுடன் இணைந்து நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜோசப் கல்லூரியில் இன்று காலை தொடங்கியது.

TVK ad

பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என இரு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.

திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் சுரேஷ்குமார் போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மொராய்ஸ்சிட்டி உரிமையாளர் லெரொன் மொராய்ஸ், ஜோசப் கல்லூரி முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


போட்டியில் 2,500 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஜோசப் கல்லூரியில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் மேலபுலிவார்டு ரோடு, மரக்கடை, மதுரை ரோடு, பாலக்கரை, மேலப்புதூர், தலைமை தபால் நிலையம், கல்லுக்குழி ரயில்வே மேம்பாலம், டிவிஎஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம், விமான நிலையம் வழியாக 10 கிலோமீட்டர் தூரத்தை கடந்து மொராய்ஸ் சிட்டியை சென்றடைந்தது.

மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 15,000 ரூபாய், இரண்டாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாய், 3ம் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.