Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காமன்வெல்த் பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று திரும்பிய வீரர்களுக்கு திருச்சியில் சிறப்பான வரவேற்பு

0

 

நியுசிலாந்து நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் திருச்சி மாவட்டம், சுப்பிரமணியபுரம் கோனார் தெருவில் வசிக்கும் ஆர். தினேஷ் சப்-ஜூனியர் 66 கிலோ உடல் எடைப் பிரிவில் புதிய சாதனைப் படைத்துள்ளார். இவர் டெட் லிஃப்ட் 218 கிலோ எடையைத் தூக்கி தங்கப்பதக்கம் வென்றதுடன் முந்தைய சாதனையான 217.5 கிலோ என்ற சாதனை முறியடித்து காமன்வெல்த் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார். மேலும், ஸ்குவாட்டில் 200 கிலோ எடையைத் தூக்கி தங்கமும், பென்ச் பிரஸ்சில் 120 கிலோ எடையை தூக்கி தங்கமும் மொத்தம் 538 கிலோ எடையைத் தூக்கியதற்காக தங்கம் என நான்கு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

இப்போட்டியின் இரண்டாவதுஅதிகபட்ச எடை தூக்கியவர் என்பதைப் பாராட்டி இவருக்கு “ஸ்டிராங்மேன்-2″ என்ற விருது வழங்கப்பட்டது.

மேலும், ஏர்போர்ட், காமராஜ் நகரைச் சேர்ந்த எஸ்.. ஷேக் அப்துல்லா என்பவர் 59 கிலோ எடைப் பிரிவில் டெட் லிஃப்ட் 170 கிலோ எடை தூக்கி தங்க பதக்கமும், ஸ்குவாட்டில் 210 கிலோ எடையைத் தூக்கி தங்கமும், பென்ச் பிரஸ்சில் 120 கிலோ எடையை தூக்கி தங்கமும் மொத்தம் 500 கிலோ எடையைத் தூக்கியதற்காக தங்கம் என நான்கு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.


காமன்வெல்த் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் சாதனை புரிந்து இன்று தாயகம் திரும்பிய இருவரையும் மக்கள் சக்தி இயக்க திருச்சி மாவட்ட செயலாளர் இரா. இளங்கோ தலைமையில் தண்ணீர் அமைப்பு செயலளார் கி.சதீஸ்குமார், சுப்பராலு சுப்ரமணியன், ராஜேஷ், கீதா,ரோட்டரி சங்க நிர்வாகிகள், மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் ,லோகு பிட்னஸ் சென்டர் நண்பர்கள் ஆகியோர் திருச்சி விமான நிலையத்தியிருந்து பொன்னாடை போர்த்தி , மாலைகள் அணிவித்து திறந்த ஜீப்பில் போண்டு வாத்தியதுடன் விமான நிலையத்தியிருந்து சுப்ரமணியபுரம் வரை ஊர்வலமாக அழைத்து கொண்டு வந்தார்கள் ,

திருச்சி பொதுமக்களும் இவர்களைப் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.