திருச்சி அரசு மருத்துவமனையில்
நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டி பா.ம.க வினர் மனு.
திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் நேருவை சந்தித்து ,பாட்டாளி மக்கள் கட்சியின் தொழிற்சங்கம் சார்பில் மத்திய மாவட்ட பா.ம.க செயலாளர் உமாநாத் தலைமையில்,
மாவட்ட பாட்டாளி தொழிற்சங்க செயலாளர் பிரபு முன்னிலையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட வேண்டும்,
தொழிற்சங்கங்கள் சார்பில் சேவை செய்யும் நோக்கில் இயக்கப்படும் ஆம்புலன்ஸ்களுக்கு இடையூறு செய்யக்கூடாது.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் தொழிற்சங்க நிர்வாகிகள் ராஜா, மதன், இஸ்மாயில், முருகேசன், மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.