Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் புதிய சட்டக் கல்லூரி தொடக்க விழா.

0

திருச்சி சமயபுரம் அருகே உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில்
சட்டக்கல்லூரி தொடக்கவிழா.நடைபெற்றது.

சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகதில் 23.-ம் (புதன்கிழமை) சட்டக்கல்லூரி தொடக்கவிழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழத்தின் வேந்தர் அ. சீனிவாசன் தலைமை ஏற்க தமிழ்நாடு சுயநிதி தொழிற்கல்வி கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக்குழுவின் தலைவர் நீதியரசர் கே. வெங்கட்ராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் பல்கலைக்கழத்தின் இணை வேந்தர் அனந்தலட்சுமி கதிரவன், பல்கலைக்கழத்தின் செயலாளர் நீல்ராஜ் , துணை வேந்தர் டாக்டர் சி.கே.. ரஞ்சன் , பதிவாளர் டாக்டர் எம். ரவிச்சந்திரன், சிறப்பு விருந்தினராக மேனாள் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி ஏ.முகமது ஜியாபுதீன், பல்கலைக்கழகத்தின் சட்ட ஆலோசகரும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தருமான முனைவர் பி.வணங்காமுடி மற்றும் அனைத்து கல்லூரிகளின் புலமுதல்வர்கள் டாக்டர்.சேகர், டாக்டர்.துளசி, டாக்டர். பேச்சியம்மாள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இவ்விழாவில் தலைமை உரையாற்றிய வேந்தர் அ. சீனிவாசன் பேசும் போது, மாணவர்கள் பெற்றோரிடமும் பெரியோர்களிடமும் பணிவுடனும் மரியாதையுடனும் நடந்து கொண்டு அவர்களின் ஆசீர்வாதத்துடன் வாழ வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

சிறப்பு விருந்தினர் நீதியரசர் கே. வெங்கட்ராமன் பேசும் போது மாணவர்கள் தங்கள் அனைத்து தடைகளிலிருந்தும் வெளியே வரவேண்டும் என்றும், தன்னம்பிக்கையை வளர்த்துகொள்ளவேண்டும் என்றும் , மக்களின் நலனுக்காக உழைக்கவேண்டும் என்றார், மேலும் அவர் மாணவர்களை இலக்குகளை நிர்ணயித்து அதை அடைய முயற்சி எடுக்க வலியுறுத்தினார்.

பல்கலைக்கழத்தின் இணை வேந்தர் அனந்தலட்சுமி கதிரவன் … மாணவர்கள் ஐந்து ஆண்டுகள் ஆசிரியரின் வழிகாட்டுதல்படி நடந்து வெற்றி பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சிறப்பு விருந்தினர் நீதிபதி ஏ.முகமது ஜியாபுதீன் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தருமான முனைவர் பி.வணங்காமுடி ஆகியோர் மாணவர்களை உக்குவித்து பேசினார்.

பல்கலைக்கழத்தின் துணை வேந்தர் டாக்டர் ரஞ்சன் பதிவாளர் டாக்டர். ரவிச்சந்திரன் ஆகியோ கூறும்போது சட்டப்பள்ளியில் உள்ள பட்டப்படிப்பு பி.ஏ.,எல்.எல்.பி., பி.பி.ஏ.,எல்.எல்.பி., மற்றும் பி.காம்.,எல்.எல்.பி., ஆகியவற்றின் வருங்கால வாய்ப்புகள் குறித்து பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.