Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மலைக்கோட்டையில் செருப்பு கழட்டும் இடத்தில் தீபம் ஏற்றும் இடம். பக்தர்கள் கண்ணீர் வேண்டுகோள்.

0

திருச்சி என்றாலே தமிழர்கள் அனைவருக்கும் நினைவுக்கு வருவது திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் தான்.

மலைக்கோட்டை திருச்சியின் வரலாற்று சின்னம்.

இந்த கோவிலில் தலைமுறை தலைமுறையாக தமிழகப் பண்பாடு, கலாச்சாரம் கடைபிடித்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன்னாள் தமிழக அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோயில்களில் விளக்கு ஏற்றக்கூடாது என்று தமிழக அறநிலைத்துறை அறிவித்துள்ளது.

பொதுவாகவே தமிழர்கள் என்றாலே சாமியை தரிசிக்கும் முன்பு இரண்டு விளக்கு தீபம் ஏற்றுவது வழக்கம்.

இப்பொழுது மலைக்கோட்டை கோயிவிலும் 2 விளக்குகள் ஏற்ற அனுமதி கிடையாது

அதுக்கு பதிலாக ஒரே ஓர் இடத்தில் விளக்கு ஏற்றும் இடம் வைக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கு வைக்கப்பட்ட இடம் பக்தர்கள் செருப்பு வைக்கும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அறநிலையத்துறை அதிகாரிகள் இந்துக்களின் கோயில் உண்டியலுக்கு (வருமானத்திற்கு) மட்டுமே முக்கியதுவம் தந்து வருகிறார்கள்.

இந்து அறநிலையத் துறையினர் விளக்கு ஏற்றம் பக்தர்களுக்கு முக்கியம் தருவதில்லை

சில பக்தர்கள் காலடி செருப்பு வைக்கும் இடத்தில் விளக்கு ஏற்றுவது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

இந்த விளக்கு ஏற்றம் விஷயத்தில் காலப்போக்கில் தமிழர் கலாச்சாரத்தில் தெய்வ வழிபாட்டின் போது விளக்கு ஏற்றி தான் சாமி கும்பிடுவார்கள் அப்படிப்பட்ட கலாச்சாரத்தை சில அதிகாரிகள் முக்கியம் தருவதில்லை ஆகையால் தமிழக இந்து அறநிலைதுறை அதிகாரிகள் உடனடியாக பக்தர்களுக்கு மனம் நோகாமல் விளக்கு ஏற்றுவதற்கு ஆவணம் செய்ய வேண்டும் என்பதே பக்தர்களின் கண்ணீர் வேண்டுகோள் ஆகும்.

Leave A Reply

Your email address will not be published.