Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பிலால் மினி மஹால் தொழிலதிபர் ஜோசப் லூயிஸ் திறந்து வைத்தார்.

0

 

திருச்சியில் ரூப் கார்டன் வசதியுடன் கூடிய பிலால் மினி மஹால் திறப்பு.

திருச்சி தஞ்சாவூர் சாலையில் காந்தி மார்க்கெட் பகுதியில் மாரியம்மன் கோவில் அருகில் பிலால் மினி மஹால் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த விழா மனி மஹாலினை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தொழிலதிபர் ஜோசப் லூயிஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

.250 பேர் அமரும் வசதி கொண்ட திருமண ஹால், 150 பேர் அமரும் வகையில் டைனிங் ஹால், பார்க்கிங் வசதி, 75 பேர் அமர்ந்து உணவருந்து வகையான ரூப் கார்டன் ரெஸ்டாரன்ட் மற்றும் ஆயிரம் நபர்களுக்கு சமைக்க கூடிய அளவு கொள்ளளவு கொண்ட சமையல் கூடம் ஆகிய வசதியுடன் அமையப்பெற்றது.

இதன் திறப்பு விழாவில் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் விஸ்வநாதன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜவகர் ,திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளர் மதிவாணன் ,ம.தி.மு.க மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு,விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் பிரபாகரன்,முன்னாள் மேயர் சுஜாதா உட்பட காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பல்வேறு கட்சியின் அரசியல் பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்தி பேசினர்

.திறப்பு விழாவிற்கு தந்தவர்களை பிலால் மினி மஹால் உரிமையாளரும் மாநகர் மாவட்ட காங்கிரஸ் செயலாளருமான பிலால் மற்றும் ராஜா முகமது ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

முன்னதாக பள்ளிவாசல் இமாம் மவுலவி மன்பஈ கிராஅத் ஓதினார்.

நிகழ்ச்சிக்கு பின் பிலால் மினி ஹாலின் உரிமையாளர் பிலால் கூறும் பொழுது திருமணம் மற்றும் சுப காரியங்கள் அனைத்தும் சிறப்பான முறையில் நடத்தும் வகையில் குறைந்த வாடகையில் நிறைந்த வசதிகளோடு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த மினி மஹால் அமைக்கப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக ஒரு நாள் வாடகை ரூபாய் 9999 மட்டுமே வசூலிக்கப்படுகிறது,

மேலும் பத்திரிகையாளர்கள் இல்ல நிகழ்ச்சிக்கு 50% கட்டண சலுகை என்றும் தெரிவித்தார்..

விழா முடிவில் காங்கிரஸ் மாநகர பொருளாளர் ராஜா நசீர் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.