Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நிறுவனங்களில் உண்மை தன்மையை ஆராய்ந்து வெளிநாடு செல்ல வேண்டும் அமைச்சர் செஞ்சி மஸ்தான்.

0

நிறுவனங்களில் உண்மை தன்மையை ஆராய்ந்து வெளிநாடு செல்ல வேண்டும்
அமைச்சர் செஞ்சி மஸ்தான் திருச்சியில் பேட்டி.

கலாச்சார கலாச்சார நட்புறவு கழகத்தின் 5வது தமிழ் மாநில மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது. மாநாட்டில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது:

தமிழகத்திலிருந்து வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக வெளிநாடுகள் சென்று தவித்த 1200 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த ஒரு மாதத்தில் மட்டும் கம்போடியா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்து 64 பேர் மீட்டு வரப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்களின் முழு விமான கட்டணம் உள்ளிட்ட முழு செலவினங்களையும் மனிதநேயத்தோடு தமிழக முதலமைச்சரே ஏற்றுக் கொண்டுள்ளார்.

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் விழிப்பாக இருக்க வேண்டும். தாங்கள் வேலைக்கு செல்லும் நிறுவனத்தின் உண்மை தன்மையை ஆராய்ந்த பின்னர் செல்ல வேண்டும்.
திருச்சியில் கூட வெளிநாடுகளுக்கு இளைஞர்களை அனுப்பி ஏமாற்றிய இரண்டு பேரை குண்டர் சட்டத்தில் அடைத்திருக்கிறார்கள்.

தமிழக அரசு தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்களை அழைத்து வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் அயலக வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் இதுவரை 181 பேர் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தற்போது இங்கிலாந்துக்கு 500 செவிலியர்களை அனுப்ப அவர்களை தேர்வு செய்து திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. என் ஆர் சி கணக்கெடுப்பு வட மாநிலங்களில் நடைபெறுவதாக சொல்கிறீர்கள். வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடாக இந்தியா இருக்கிறது.

தமிழக முதலமைச்சரும் இதனை வலியுறுத்தி வருகின்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.