Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நெல்லையில் செயலிழந்த உளவுத்துறை அதிகாரிகளை உடனே மாற்ற பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் வேண்டுகோள்.

0

நெல்லை மாவட்டத்தில்
செயலலிழந்த
உளவுத்துறை
அதிகாரிகளை உடனே மாற்றிட வேண்டும்.

பாரத முன்னேற்றக் கழகம் வலியுறுத்தல்.

இதுகுறித்து பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியை சேர்ந்த மாயாண்டி கோனார் கடந்த10.11.22 ம் தேதியன்று கூலிப்படையினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்

ஆனால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் அரிவாள் பிடிக்கத்தெரியாத இளைஞர்களாம்.

சீவலப்பேரி சுடலை ஆண்டவர் கோயில் பூசாரி துரைக்கோனார் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த மாயாண்டி கோனார் கொலைக்கு காரணமான உண்மையான கூலிப்படையினர் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது வேதனை

பூசாரி கொலை வழக்கின் வீரியம் அறிந்தும் முக்கிய சாட்சியான மாயாண்டியை காப்பதற்கோ
அவருக்கு உரிய பாதுகாப்பு கொடுப்பதற்கோ காவல்துறையினர் இம்மியளவும் நடவடிக்கையும் எடுக்கவில்லை

காவல்துறை உரிய பாதுகாப்பு கொடுத்திருந்தால் மாயாண்டியை யாதவ சமுதாயம் இழந்திருக்காது.
காவல்துறையின் மெத்தன போக்கு கண்டனத்திற்குரியது.

கடந்த 10 வருடத்திற்குள் சுமார் 20 யாதவ பிரமுகர்கள்- யாதவ சமுதாய அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளர்
குறிப்பாக நான்கு ஐந்து வருடத்திற்குள் யாதவ சமுதாயத்தினை சேர்ந்த சுமார் 13 பேர் மாற்று சமுதாயத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் எந்த ஒரு கொலைக்கும் யாதவ சமுதாயத்தினர் எதிர்வினையில் இறங்கவில்லை.
நேர்மையான முறையில் நீதி கேட்டு போராடி வருகின்றனர்.

இதில் கொடுமை என்னவெனில் யாதவர்களை பலிகொண்டவர்கள் எவர் ஒருவரும் நீதிமன்ற தண்டனைக்குள்ளாக்கப்படவில்லை.

மற்ற மாவட்டங்களில் எல்லாம் ஒரு குற்ற செயலில் ஈடுபட்டால் கூட அந்த நபரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து விடுகின்றனர்.

விடுதலையானவர்களை தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர்

ஆனால்……
திருநெல்வேலி மாவட்டத்தில் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் காவல்துறை மேற்கொண்டதாக தெரியவிலை.அமைதியான சமுதாயமாக யாதவர் சமுதாயம் இருக்கும் என்று காவல்துறையினர் நினைகின்றனர்.சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

தமிழகம் முழுதுவதும் உள்ள பல தரப்பினரும் திருநெல்வேலி கூலிப்படையினரால்தான் கொல்லப்படுகின்றனர்.என்பது உலகமறிந்த விசயம் . அவர்களை கட்டுப்படுத்தமுடியவில்லை என்பதை நேர்மையான அதிகாரிகள் ஒப்புக்கொள்கின்றனர்

முக்கியமாக நெல்லையில் மாநகர நுண்ணறிவுப்பிரிவு
,எஸ்.பி.சி.ஐ.டி,,குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு போலிசாரின் செயல்பாடுகள் அறவே இல்லை என்பதே மாவட்ட மக்களின் கருத்து

தமிழக முதல்வரும்,காவல்துறை தலைமை இயக்குனரும் துரித நடவடிக்கை மேற்கொண்டு மாயாண்டி கொலையில் சம்பந்தப்பட்டவர்கள்- அதற்கு காரணமானவர்கள்- கூலிப்படையினர் அனைவரையும் பிடித்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வது மட்டுமின்றி

மிக மிக செண்சிட்டிவ் மாவட்டமான நெல்லை மாவட்டத்தில் செயல்படாமலும் மந்தகதியிலும் உள்ள காவல்துறை அதிகாரிகளை,உளவுத்துறையினரை பணியிட மாற்றம் செய்து அங்கு நேர்மையான அதிகாரிகளை – காவலர்களை நியமித்து இனி மாயாண்டி கோனார் போல் எவர் ஒருவரும் கொல்லப்படக்கூடாது என்பதனை உறுதிப்படுத்திட முன் வேண்டும் என யாதவ சமுதாயம் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்

இவ்வாறு தமது அறிக்கையில் பாரதராஜா யாதவ் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.