Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

யாரையும் நம்பாமல் படிப்பை நம்புங்கள்:எம்.ஏ.எம் பொறியியல் தொழில்நுட்பவியல் கல்லூரியின் 10ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர் பேச்சு.

0

திருச்சி சிறுகனூரில் அமைந்துள்ள எம் .ஏ .எம் பொறியியல் தொழில்நுட்பவியல் கல்லூரியில் 10வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது.

இந்த விழாவில் புதுச்சேரி தொழில்நுட்பவியல் பல்கலைக் கழக துணைவேந்தர் பேரா. முனைவர். எஸ். மோகன் கலந்து கொண்டு முன்னூறு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழா பேருரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், டாக்டர். மாலுக் முகமது, மாஸ்டர் கல்வி குழும தலைவர்
வரவேற்புரையாற்றினார்.
பாத்திமா பதூல் மாலுக், செயளாளர், முதன்மை கல்வி அலுவலர் தலைமை தாங்கினார்.

எம்.ஏ.எம் வணிக பள்ளி மற்றும் எம்.ஏ.எம் கட்டிடக்கலை பள்ளி இயக்குனர் முனைவர் ஹேமலதா கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற கல்லூரின் முக்கிய நிகழ்வுகளையும், செயல்பாடுகளையும், பட்டியலிட்டார்.

பிறகு கல்லூரி முதல்வர். முனைவர். எக்ஸ், சூசன் கிறிஸ்டினா கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற கல்லூரின் முக்கிய நிகழ்வுகளையும்,சாதனைகளையும், செயல்பாடுகளையும், பட்டியலிட்டார்.

பேரா. முனைவர். எஸ். மோகன் அவர்கள் தனது பட்டமளிப்பு விழா பேருரையில் மாணவர்களை வாழ்த்தி புதிர்நிறைந்த எதிர்காலத்தில் சந்திக்க இருக்கும் சவால்களை கல்லூரியில் இருந்து பெற்ற கல்வியை அடிப்படையாக கொண்டு நிகழவிருக்கும் தத்தம் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளும் படிப்பினை மூலமும் யாரையும் நம்பாமல் உங்களை நீங்கள் நம்புங்கள் என பட்டதாரிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் பேசினார்.

பின்னர் துறை வாரியாக பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கி பல்கலைக்கழக அளவில் தரவரிசையில் இடம் பெற்ற சுமார் பதினைந்து மாணவ மாணவியரை சிறப்பு செய்தார்.

மேலும் கல்விக்குழுமத்தின் பதிவாளர் முனைவர் பி.முருகானந்தம் பல்கலைக்கழக அளவில் தரவரிசையில் இடம் பெற்ற சுமார் பதினைந்து மாணவ மாணவியரையும், இன்றைய நாளில் பட்டம் பெற இயலாத நிலையிலிருந்த பட்டதாரிகளின்
பெயர்களை வாசித்தார்.

முனைவர்.
எஸ்.ராஜசேகரன், கல்விப் புலத்தலைவர் நன்றியுரை ஆற்றினார்.

குடிமைப் பொறியியல் துறை தலைவர் முனைவர் கே. சசிகலா ஏனைய பேராசிரிய பேராசிரியைகளின் துணையோடு விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.

பல மாணவ மாணவியரின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பட்டம் வாங்கும் விழாவை நேரில் கண்டு சிறப்பு செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.