Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை முன்னிட்டு ஒற்றுமைக்கான ஓட்டம்.மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் தொடக்கி வைத்தார்.

0

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் ஒற்றுமைக்காக ஓடவும் என்ற கருத்தை வலியுறுத்தி மத்திய கல்வித்துறை இணைய அமைச்சர் டாக்டர்.சுபாஷ் சர்கார் ஒற்றுமை ஓட்டப்பயணத்தை கொடியசைத்து துவங்கி வைத்து ஓடினார்.

மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர்.சுபாஷ் சர்க்கார் திருச்சியில் இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்ப்பதாக நேற்று மாலை திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அதனைத் தொடர்ந்து மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தேவர் ஜெயந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து தேசிய தொழில்நுட்ப கழகத்தில் இரவு தங்கினார்.
இன்று காலை தேசிய தொழில்நுட்ப கழக வளாகத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஒற்றுமை வலியுறுத்தி விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர் சுபாஸ் சர்க்கார் பேசுகையில் ….

நாட்டில் 532 மாகாணங்களில் ஒருமைப்படுத்துவதற்காக சர்தார் வல்லபாய் பட்டேல் பாடுபட்டு இருக்கிறார். மேலும் சர்க்கார் வல்லபாய் பட்டேலை பெருமைப்படுத்துவதற்காக இந்திய அரசு நாடு முழுவதும் இந்த நாளை வெகு விமர்சியாக கொண்டாடுகிறது. தொடர்ந்து இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பெருமைகளை எடுத்துரைத்து ஒருமைப்பாட்டு உறுதி மொழியை வாசித்தார். மாணவ, மாணவிகள் உறுதி மொழியை ஏற்று க்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து சர்த்தர் வல்லபாய் பட்டேலின் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து மோடி 20 என்ற புத்தகத்தை குறித்து மாணவர்களிடையே கலந்துரையாடுகிறார்.

இந்நிகழ்ச்சி தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குனர் அகிலா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.