திருவரங்கத்தில்
பட்டதாரி வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.
திருவானைக்காவல் நடுகொண்டையம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் நாகேந்திர பாபு (வயது 25) இவர் டிப்ளமோ முடித்துவிட்டு தற்பொழுது தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் இவர் அரசு வேலையும் தேடி வந்தார்.மேலும் மேற்படிப்பு படிக்கவும் திட்டமிட்டு இருந்தார். இந்த நிலையில் சரியான வருமானம் இல்லாத காரணத்தால் தொடர்ந்து படிக்க முடியாத நிலைமையும்,அரசு வேலையும் கிடைக்காத காரணத்தால் மன இறுக்கத்தில் காணப்பட்டார்.
நிலையில் சம்பவத்தன்று நாகேந்திர பாபு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறைக்கு சென்று மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகேந்திரன் இறந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.