எடப்பாடி பழனிச்சாமி கைது செய்ததை கண்டித்து திருச்சி மாநகர அதிமுகவினர் மறியல்.நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது.
எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து
திருச்சியில் அ.தி.மு.க
வுடன் மறியல் போராட்டம்.
தமிழக சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தங்களுக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி வழங்காததை கண்டித்து வெளிநடப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி இன்று தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
இதனை கண்டித்து தமிழக முழுவதும் இன்று அதிமுகவினர் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் எம்.பி . ரத்தினவேல், மாநில எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் ஜெ. சீனிவாசன்,மாவட்ட இணை செயலாளர் ஜாக்குலின், கவுன்சிலர்கள் அரவிந்தன், அம்பிகாபதி, பகுதி செயலாளர்கள் அன்பழகன், முஸ்தபா, சுரேஷ் குப்தா,சிந்தாமணி தலைவர் சகாதேவ் பாண்டியன், கலிலுல் ரகுமான், சிங்காரம், வண்ணாரப்பேட்டை ராஜன், வெல்லமண்டி கன்னியப்பன் மற்றும் திரளான கட்சியினர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பெரியார் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.அங்கு அவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.