Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி நுகர்வோர் பொருள் வாணிபக்கழக பொது தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

0

மாநில மாநாட்டு தீர்மானங்களை விளக்கி
நுகர்பொருள் வாணிபக்கழக பொதுத்தொழிலாளர்கள்
சங்கம் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் உள்ள காலிப்பிணிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

2012 பருவ கால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் அயல்துறை அதிகாரிகளை மண்டல மேலாளராக நியமயனம் செய்வதை ரத்து செய்ய வேண்டும்.

சுமைப்பணி தொழிலாளர்களை அவுட்சோர்சிங் முறையில் நியமனம் செய்வதை ரத்து செய்ய வேண்டும்.

சுமைப்பணி தொழிலாளர்களுக்கு நிலுவை தொகை மற்றும் கூலி உயர்வு வழங்க வேண்டும்.

கழகப் பயன்பாட்டில் உள்ள நவீன அரிசி ஆலைகளை தனியாருக்க தாரை வார்க்க கூடாது. அமுதம் ரேசன் கடைகளை கூட்டுறவு துறைக்கு மாற்றக் கூடாது. இன்டேண் எரிவாயு பிரிவில் பணிபுரிய கூடிய சிலிண்டர் சப்ளை செய்யும் பணியாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும்.

கணினி பிரிவு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

மாதந்தோறும் சம்பளத்தை கால தாமதம் செய்யாமல் வழங்க வேண்டும். நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை கால தாமதம் செய்யாமல் உடனுக்குடன் இயக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட மாநில மாநாட்டு தீர்மானங்களை விளக்கி சிஐடியூ தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொதுத்தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மண்டல தலைவர் வேலு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சங்க மாநில பொருளாளர் ஏழுமலை, மாநில செயலாளர் ராசப்பன், சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் சீனிவாசன், மாவட்ட துணைத்தலைவர் சிவக்குமார் ஆகியோர் பேசினர்.
இதில் சங்க நிர்வாகிகள் அய்யப்பன், கருணாகரன், ஐயப்பன், நாகே~;, வடிவேல், சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முடிவில் மண்டல பொருளாளர் சின்னையன் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.