Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எல்பின் உரிமையாளர் வீட்டில் போலீசார் போல் மிரட்டிய மூன்று பேரிடம் போலீசார் விசாரணை..

0

திருச்சி மன்னார்புரத்தில் செயல்பட்டு வந்த எல்பின் நிறுவனத்தில் நெருங்கிய தொடர்பில் இருந்த நிருபர் என்ற பெயரில் உடன் இருந்த கருப்பு ஆடு குழி தோண்டியதால் ஏற்பட்ட சிறு பிரச்சனையால்

இந்நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு குறித்த நேரத்தில் முதிர்ச்சி அடைந்த பணத்தை திருப்பி தர முடியவில்லை. (இதற்கு முக்கிய காரணம் கொரோனா காலக்கட்டத்தில் இருந்த முழு ஊரடங்கு தான்)

ஊரடங்கு முடிந்த பின் பணத்தை திருப்பி எல்பின் நிறுவனத்தினர் பணத்தை தர முயற்சி எடுத்த நேரத்தில் ஒரு கும்பல் சிலரை தூண்டிவிட்டு நிறுவனத்தை மூட முயற்சி எடுத்து வருகின்றனர். இதில் என்பின் நிறுவனத் தலைவர் ராஜா என்னும் அழகர்சாமி தற்போது மதுரை சிறையில் உள்ளார்.

இந்த நிலையில் பலரும் எல்பின் நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை வாங்கித் தருகிறேன் எனக் கூறி அப்பாவி பெரது மக்களிடம் பெரும் தொகையை கமிஷனாக வாங்கி ஏமாற்றி வருகின்றனர்.

அப்பாவி பொதுமக்களை நம்ப வைப்பதற்காக நான் என்பின் உரிமையாளர்கள், அதன் முக்கிய பங்குதாரர்களை மிரட்டி வைத்துள்ளேன் என நம்புவதற்காக அவர்களிடம் சென்று மிரட்டுவதை வீடியோ எடுத்து வைத்து பொதுமக்களிடம் காட்டி பணம் பறித்து வருகின்றனர்..

இதில் ஒரு நிகழ்வாக நேற்று எல்பின் நிறுவனர் ராஜா என்னும் அழகர்சாமியின் சகோதரியின் இல்லத்திற்கு சென்ற பட்டாசு ராஜா (எ) கோவிந்தராஜ், தினகரன்,
மணி பெரியசாமி ஆகிய மூன்று பேரும் தங்களை போலீசார் என கூறி வீட்டிற்குள் சென்று உன் தம்பி மக்களை ஏமாற்றி விட்டு ஜாலியாக சென்று சிறையில் இருந்தால் விட்டு விடுவோமா என தகாத (ஆபாச ) வார்த்தைகளால் பேசி தகராறு செய்து சென்றுள்ளனர்.

இதனால் மன உளைச்சல் அடைந்த அழகர்சாமியின் சகோதரி ரேவதி சென்னை மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

புகாரினை விசாரித்த மதுரவாயல் காவல்துறை ஆய்வாளர் சிவா ஆனந்த்  காவலர்கள் போல் சென்று மிரட்டிய பட்டாசு ராஜா (எ)கோவிந்தராஜ்,
தினகரன் மற்றும் மணி பெரியசாமி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.