Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

என் கடமை உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் சென்னை உணவுத் திருவிழாவில் ஒளிபரப்பு.

0

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற உணவு திருவிழா குறும்பட போட்டியில் முதல் பரிசை பெற்ற என் கடமை உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற சிங்கார சென்னை உணவு திருவிழாவில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சென்னையில் கடந்த ஆகஸ்ட் 12 ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13,14 வரை நடைபெற்றது.

இவ்விழாவின் தொடக்க விழா நிகழ்வினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம. சுப்பிரமணியம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.சேகர்பாபு ஆகியோர் சென்னை தீவுத்திடலில் தொடங்கி வைத்தனர்.

பல்வேறு கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம், மேஜிக் ஷோ, சிலம்பம் போன்ற பாரம்பரிய கலைகள் நடனம் நகைச்சுவை நிகழ்ச்சி மாணவ மாணவிகள் உலக சாதனை நிகழ்ச்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன .

சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் சிங்கார சென்னை உணவு திருவிழா நிகழ்வில் திருச்சி மாற்றம் அமைப்பு மற்றும் திருப்பூர் ஈஷா மீடியா நிறுவனம் சார்பில் எடுக்கப்பட்ட என் கடமை விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்த உணவு திருவிழா நிகழ்வில் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணைவியார் துர்கா ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த உணவு திருவிழா நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி Dr.P. சதீஸ்குமார் MBBS. MS (Ortho) மற்றும் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி டாகடர்.P.ஜகதீஷ் சந்திர போஸ் MBBS, டிரிம்ப் உலக சாதனை புத்தக குழுவின் நிர்வாக இயக்குனர் எஸ். கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலையிலும் பல்லாயிரக்கனக்கான சென்னை வாழ் பொதுமக்கள் முன்னிலையிலும் மிகப்பெரிய அகன்ட டிஜிட்டல் திரையில் என் கடமை விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

முழுபடமும் பார்த்து முடித்த பின் படக்குழுவினரை பாராட்டி, படத்தின் இயக்குனர் குமார் தங்கவேல் மற்றும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் ஆகியோருக்கு சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி Dr.P. சதீஸ்குமார் MBBS. MS (Ortho)அவர்கள், சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

சென்னை உணவு திருவிழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கண்கவரும் வகையில் மாணவ மாணவிகள் நிகழ்த்தினர்.

நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் பல பாரம்பரிய உணவு வகைகள் பல சுவையான உணவு வகைகள் இடம்பெற்று இருந்தன.

திருச்சியை தொடர்ந்து சென்னையிலும் என் கடமை உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படத்திற்க்கு பாராட்டுகள் கிடைத்தது என் கடமை படகுழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.