திருச்சி எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலியால் வெளிச்சம் கிடைத்தது. பொது மக்கள் நன்றி.
திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில்
கடந்த 3.6.22 முதல் சுங்கம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் கல்லக்குடி எல்லையில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது என கடந்த 2 நாட்கள் முன் திருச்சி எக்ஸ்பிரஸ்ஸில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
கல்லக்குடி எல்லைக்குட்பட்ட புறவழி சாலை முழுவதும், ராஜா தியேட்டர் பேருந்து நிறுத்தம், மால்வாய் ரோடு பேருந்து நிறுத்தம மற்றும் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள அணுகுசாலைகள் மின்விளக்குகள் மின் இணைப்பு தரப்படாமல் கும்மிருட்டில் மூழ்கி இருந்தது.
மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மாலை நேரங்கலிலேயே இருளில் மூழ்கி நடு இரவு போல் பாதுகாப்பு இன்றி காணப்படுகின்றன.இப்பகுதியில் விபத்துக்கள் அடிக்கடி ஏற்படும், இது மட்டும் இல்லாமல் இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்களும் நடைபெற்று உள்ளது.இதனால் அப்படி பொதுமக்கள் மாலை நேரங்களில் வெளியில் வரவே தயங்கி வந்தனர்.
வசூல் செய்கின்ற சுங்கத்திற்கும், வாங்குகின்ற ஊதியத்திற்கும் அரசு துறைகள், அதிகாரிகள் சற்றேனும் மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். என அப்பொழுது பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்த செய்தியினை கண்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதனால் அப்பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் மின் விளக்குகள் ஒளிர தெடங்கியுது.
இந்த செய்தியை வெளியிட்ட திருச்சி எக்ஸ்பிரஸ் மின் இதழுக்கும், நடவடிக்கை எடுத்த துறை அதிகாரிகளுக்கும் அப்பகுதிப் பொதுமக்கள் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.