Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் புகையிலை விழிப்புணர்வு வாகனத்தை மேயர் அன்பழகன் தெடங்கிவைத்தார்.

0

 

புகையிலையை உபயோகப்படுத்துவதால்
நுரையீரல், சிறுநீரகம், பித்தப்பை, கணையம்
வயிற்றில் புற்றுநோய் ஏற்படலாம்.

உலக சுகாதார அமைப்பு ஆண்டுதோறும் மே 31-ஆம் தேதியை உலகபுகையிலை தினமாக கடைப்பிடித்து வருகிறது. இதையொட்டி ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் ரோஸ் கார்டன் அறக்கட்டளை இணைந்து புகையிலையினால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதனால் ஏற்படும் பூமி மாசுபடுதல் குறித்த விழிப்புணர்வை கடந்த 12 ஆண்டுகளாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இந்த ஆண்டும் இயற்கையை காப்போம் என்ற கருப்பொருளை மையமாக வைத்து திருச்சி நாகமங்கலத்தில் உள்ள ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் விழிப்புணர்வு நாடகங்கள், நடனங்கள் மற்றும் வாகன பிரச்சாரம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மருத்துவமனை நிர்வாக இயக்குனரும், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர். கோவிந்தராஜ் தலைமை வகித்து பேசுகையில் :

புகைப்பிடிப்பதால் சுவாச கோளாறுகள், புற்றுநோய் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கிறது. புகையிலையில் ஏழாயிரத்தும் மேற்பட்ட ரசாயனங்கள் உள்ளது. இதில் குறைந்தது 70 ரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்க கூடியது. இது 20 வகையான புற்றுநோய்களை உண்டாக்குகிறது. மெல்லக்கூடிய மற்றும் புகைக்கும் புகையிலையை உபயோகப்படுத்துவதால் நுரையீரல், சிறுநீரகம், பித்தப்பை, கணையம் மற்றும் வயிறு ஆகிய உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படலாம் என்றார்.

பின்னர் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மேயர் அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
;
இந்நிகழ்ச்சியில் டாக்டர்.சசிப்பிரியா கோவிந்தராஜ், கமலாகருப்பையா, கள்ளிக்குடி சுந்தரம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.