Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியனின் 34ஆவது மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது.

0

'- Advertisement -

Ad banner

ஆட்சியாளர்களின் பிற்போக்குதனத்தை எதிர்த்து
போராடுவதற்கான வலுவை தொழிற்சங்கங்கள்
உருவாக்க வேண்டும் : சவுந்தரராசன் பேச்சு.

தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியனின் 34வது மண்டல மாநாடு திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகில் உள்ள ரயில் கல்யாண மண்டபத்தில் தோழர் கே.சங்கரநாராயணன் திடலில் மற்றும் தோழர் என்.தனபால் நினைவரங்கத்தில் வெள்ளி மற்றும் சனக்கிழமைகளில் நடைபெற்றது.
மாநாட்டிற்கு டிஆர்இயு தலைவர் ஜி.சுகுமாறன் தலைமை வகித்தார். சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ரெங்கராஜன் வரவேற்றார். அஞ்சலி தீர்மானத்தை துணை பொதுச்செயலாளர் சாம்பசிவன் வாசித்தார். மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் துவக்கவுரையாற்றினார். டிஆர்இயு பொதுச்செயலாளர் மேத்யூவ்சிரியக் அறிக்கை வாசித்;தார்.
மாநாட்டில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 531 ஆக்ட் அப்ரண்டீஸ்களை உடனே நிரந்தரம் செய்ய வேண்டும்.

இபாஸ்-ஐ ரத்து செய்து பழைய முறையில் காகித பாஸ் வழங்க வேண்டும். எம்ஏசிபி வழங்க வெரிகுட் இருக்க வேண்டும் என்கிற முறையை ரத்து செய்து பிரமோ~ன் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். ஏ.சி.கோச் டெக்னீசியனுக்கு உதவியாளர் ரயில்வே தொழிலாளியாக இருக்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களாக இருக்க கூடாது. நைட் டூட்டி அலவன்ஸ் ரூ 43600க்கு மேல் சம்பளம் பெரும் அனைவருக்கும் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து பயணிகள் ரெயில்கள் உடனே இயக்க வேண்டும். ரயில்வே ஆஸ்பத்திரி(பாலக்காடு) தற்போதைய தேவைக்கு ஏற்றாற்போல் நவீன மயமாக்கி தரம் உயர்த்த வேண்டும்.

தொழிற்சங்க நிர்வாகிகளை பழிவாங்குவது, தொழிற்சங்க நடவடிக்கையை முடக்கும் டிஆர்எம்-பிஜிடி அவர்களை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும். ரயில்வே போர்டு உத்தரவுப்படி எல்ஏபி போல் சிசிஎல் அந்த டெப்போ இன்சார்ஜ்களே வழங்க வேண்டும். டிராக்மேன்களுக்கு ரூ4200 வழங்க வேண்டும். மதவெறிக்கு எதிராக தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்களை துணை பொதுச்செயலாளர் பேபிகோகிலா முன்மொழிந்தார். தகுதி ஆய்வு படிவத்தை துணை பொதுச்செயலாளர் நெடுமாறன் வாசித்தார்.
மாநாட்டின் இரண்டாம் நாளான சனிக்கிழமை அன்று சங்க அமைப்பு விதிகள் திருத்தம் குறித்து துணைத்தலைவர் இளங்கோவன் பேசினார். வரவு – செலவு அறிக்கையை பொருளாளர் சரவணன் தாக்கல் செய்தார்.
எதிர்கால இயக்கங்கள் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்து டிஆர்இயு செயல் தலைவர் ஜானகிராமன் பேசுகையில்: புதிய பென்சன் திட்டத்தில் உள்ள தொழிலாளர்களை அணி திரட்டி போராட வேண்டும். அதற்கென ஒரு கமிட்டி அமைத்து பிரச்சாரங்கள், கருத்தரங்குகள், நூதன போராட்டங்கள் நடத்த வேண்டும்.

மேலும் மாநில அளவில் தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்களை இணைத்து டெல்லியில் போராட்டம் நடத்த வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அறிவிக்கும் கட்சிக்கே மத்திய டிஆர்இயு சங்கம் வாக்களிக்கும் என பகிரங்கமாக அறிவிப்போம்.

கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி சென்னையில் மண்டல அளவிலான போராட்டத்தை நடத்துவோம் என்றார்.
சிஐடியு தமிழ்மாநில தலைவர் ஜி.சுகுமாறன் தொகுப்புரையாற்றினார். சிஐடியு தமிழ்மாநில தலைவர் அ.சவுந்தரராசன் நிறைவுரையாற்றினார்.

முடிவில் டிஆர்இயு பொதுச்செயலாளர் செயலாளர் ஹரிலால் நன்றி கூறினார்.

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கௌரவ தலைவராக டி.கே.ரெங்கராஜன், தலைவராக ஜி.சுகுமாறன், செயல் தலைவராக ஏ.ஜானகிராமன், பொதுச்செயலாளராக வி.ஹரிலால், இணைசெயலாளர்களாக ஏ.வெங்கட்ராமன், என்.ரவிக்குமார், துணைத்தலைவர்களாக அ.சவுந்தரராசன், இளம்மறம்கரீம், பி.மேத்யூசிரியக், என்.பத்மகுமார், ஏ.எம்.பேபி ஷகிலா, ஜி.சிவக்குமார். அனில்குமார், உதவி பொதுச்செயலாளர்களாக பி.சந்தானசெல்வம், எஸ்.அருண்குமார்செழியன், உதயபாஸ்கர், எஸ்.செந்தில்குமார், கே.பிஜூ, என்.சிவக்குமார், என்.கார்த்திக்சங்கிலி, ஆர்.சரவணன், ஜி.மீரய்யா, தீபாதிவாகரன், எஸ்.ராஜா, பொருளாளர் ஆர்.சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.