திருச்சியில் மது குடிக்க மனைவி தடை.தொழிலாளி தற்கொலை
திருச்சி இ.பி. ரோடு பகுதியை சேர்ந்தவர் சையது இப்ராஹீம் (வயது 40). இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார்.
இந்த நிலையில் அவரது உறவினர்கள் மதுபோதை மீட்பு மையத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
இருப்பினும் அவரால் மதுவை மறக்க இயலவில்லை.
இந்த நிலையில் மனைவி மற்றும் குடும்பத்தினர் மீண்டும் மது குடிக்க எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சையது இப்ராஹிம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறி கொக்கியில் மனைவி சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி அவரது மனைவி மகபூப் பீவி கோட்டை போலீசில் புகார் செய்தார்.
சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.