த.மு.எ.க.ச
சார்பில் மே தின நூற்றாண்டு நிகழ்ச்சி.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மே தின நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி திருச்சி உறையூரில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கவிஞர் சுரபி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் சிவ. வெங்கடேஷ் வரவேற்றார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட வர்க்க போராட்ட வரலாறு குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் திருவாரூர் மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடேசன் பேசினார்.
நிகழ்ச்சியில் கவிஞரும், பாடகருமான வெற்றி நிலவன் பாடல் பாடினார். கவிஞர் தனலட்சுமி பாஸ்கரன், கார்த்திகா ஆகியோர் கவிதை வாசித்தனர்.
டாணாக்காரன் திரைப்படம் குறித்து கவிஞர் இளங்குமரன் விமர்சனம் செய்தார்.
முடிவில் நாகநாதன் நன்றி கூறினார்.