ரேஷன் கடையில் மோடி படம் உடைப்பு.இனி கலெக்டர் ஆபீஸ்,மாநகராட்சி அலுவலகத்திலும் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வலியுறுத்துவோம் பா.ஜ.க.மாவட்ட தலைவர் ராஜசேகரன்.
பாரத பிரதமர் மோடி படம் உடைப்பு விவகாரம்;
தடையை மீறி ஆர்ப்பாட்டத்திற்கு முயன்ற பா.ஜ.க.வினரை
போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்றனர்.
திருச்சி பொன்நகர் செல்வம் நகர் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் நேற்று பா.ஜ.க.வினர் பிரதமர் மோடி படத்தை வைக்க முயன்றனர்.
இதில் தி மு.க.வினருக்கும் பாஜகவுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.மண்டல் தலைவர் பரமசிவம் ஆயக்கட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இதில் நரேந்திர மோடியின் படம் உடைத்து வீசப்பட்டது.
இதையடுத்து பாஜகவினர் மோடி படத்தை உடைத்து சாக்கடையில் வீசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உதவி போலீஸ் கமிஷனர் அஜய் தங்கத் இடம் புகார் அளித்தனர்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்பட்டது.
இதையடுத்து மோடி படத்தை உடைத்த மாநகராட்சி கவுன்சிலர் ராமதாஸ் உள்ளிட்ட தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு பாஜகவினர் திரண்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.
இதனால் அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார தடையை மீறி திரண்ட பாஜகவினரை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.
இதனால் பாஜகவினருக்கு போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்ஏற்பட்டது. பின்னர்
மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் போராட்டக்காரர்களை அடைத்து வைத்தனர்.
அங்கும் அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுகவினரை கைது செய்ய கோஷங்கள் எழுப்பி கொண்டிருந்தனர்.
இதில் முன்னாள் மாவட்ட தலைவர் பார்த்திபன் மாவட்ட பொதுச்செயலாளர் ஒண்டி முத்து, காளீஸ்வரன், தண்டபாணி ,மாவட்ட துணைத்தலைவர் இந்திரன், நாகேந்திரன், அழகேசன், மண்டல் தலைவர் புருஷோத்தமன் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
கலெக்டர் அலுவலக ஆர்ப்பாட்டத்தில் கௌதம் உள்ளிட்ட பாஜக வினர் திரளாக பங்கேற்றனர். இரண்டாவது நாளாக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டது.
உதவி போலீஸ் கமிஷனர் அஜய் தங்கம் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
மாலையில் வட்டாட்சியர் மற்றும் மேற்கு தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் ராமதாஸ் மீது வழக்கு பதிவு செய்தால்தான் மண்டபத்தில் இருந்து வெளியேறுவோம் என கூறியதன் அடிப்படையில் கவுன்சிலர் ராமதாஸ் மீது (275/202 )வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர் பாஜகவினர் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட தலைவர் ராஜசேகரன் கூறுகையில் நேற்று பாரத பிரதமர் மோடியின் படத்தை ரேஷன் கடையில் வைக்க முற்பட்ட எங்கள் கட்சி மண்டல் தலைவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி புகார் அளித்தோம். அந்த மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் செய்து விட்டு மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு அளிக்க இருந்தோம், ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது என கூறினார்கள். ஆனால் விவசாயி என்ற போர்வையில் அய்யாக்கண்ணு வெறும் கோமணத்துடன் அரைநாள் நடுரோட்டில் செய்யும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்கும் காவல்துறையினர் எங்களுக்கு அனுமதி ஏன் அளிக்கவில்லை.
மேலும் எங்களது நிர்வாகிகளின் செல்போன்களை போலீசார் உடைத்துள்ளனர்.
எனது காரின் சாவியை உடைத்து வீசி எறிந்து விட்டனர்.எனது கார் நடுரோட்டில் நிற்கிறது.
எங்களுக்கும் காவல்துறைக்கும் ஏன் அனைவருக்கும் பிரதமர் மோடிதான்.
40 சதவீதம் மத்திய அரசின் மானியம் பெறும் ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் படத்தை வைப்பதற்கு ஏன் தடுக்க வேண்டும்.
இனி 80% மத்திய அரசின் மானியத்தில் இயங்கும் (உள்ளாட்சித்துறை) மாநகராட்சிகளில்,மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பாரத பிரதமரின் படத்தை வைக்க வலியுறுத்துவோம் என கூறினார்.