திருச்சியில் இளம்பெண் மற்றும் பிளஸ் 1 மாணவி மாயம்.
தேவதானம் தாயுமானவர் அப்பார்ட்மெண்ட் பகுதியை சேர்ந்தவர் விஜயராஜன். இவரது மகள் சிவசக்தி (வயது 17) இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை . பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.. இதை எடுத்து விஜயராஜன் கோட்டை காவல் நிலையத்தில் தனது மகளை தேடி கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளார்.
இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவி சிவசக்தியை தேடி வருகிறார்.
இதேபோன்று தில்லைநகர் பகுதியில் உறவினர் வீட்டுக்கு வந்த ஒரு இளம்பெண் மாயமானார்.
மதுரை சமயநல்லூர் புதுத்தெரு பகுதியை சேர்ந்த லதீபா பேகம் (வயது 17) என்ற இளம்பெண் திருச்சி தென்னூர் ஸ்ரீ தோப்பு பகுதியை சேர்ந்த முகமது ஆசிப் என்ற உறவினர் வீட்டிற்கு வந்தார். கடந்த ஒரு மாதமாக இங்கு தங்கியிருந்த அவர் இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றார்.பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இதுபற்றி முகமது ஆசிப் தில்லை நகர் போலீசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து மாயமான லதீபாவை தேடி வருகிறார்.