ஸ்ரீரங்கத்தில் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை.
திருச்சி ஸ்ரீரங்கம் சுப்பிரமணியபுரம், பன்னீர் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்.( வயது 49).
கட்டிடத் தொழிலாளியான இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார்.
இந்த நிலையில் திடீரென வீட்டில் உள்ள குளியலறையில் தனது வேட்டியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
இதுபற்றி அவரது மனைவி சுமதி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

