திருச்சியில் பொற்கொல்லருக்கு பீர் பாட்டில் குத்து.இருவர் கைது.
திருச்சி காஜாபேட்டை புது தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 31). இவர் சந்துகடை வீதியில் பொற்கொல்லர் ஆக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இவருக்கும் வடக்கு ஆண்டாள் தெருவை சேர்ந்த மாணிக்கம் (38) மற்றும் ஜீவா நகரை சேர்ந்த மணி (26) என்பவருக்கும் இடையே தொழிலில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கார்த்திக் சந்துகடை பஜார் பகுதியில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த அந்த இரண்டு பேரும் அவருடன் தகராறில் ஈடுபட்டு பீர் பாட்டிலால் தலையில் தாக்கி உள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.