திருச்சியில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியதாக 2 பேர் கைது .
2 லாரிகள், 6 யூனிட் மணல் பறிமுதல்.
திருச்சி ஏர்போர்ட் அன்பில் நகர் சந்திப்பு பகுதியில் சிறப்பு தாசில்தார் ஜெயப்பிரகாசம் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது கிராவல் மண் ஏற்றி வந்த இரண்டு லாரிகளை மறித்து சோதனையிட்டபோது உரிய ஆவணங்கள் இன்றி விதிமுறைகளை மீறி கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது.
உடனே அந்த இரண்டு லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஏர்போர்ட் போலீசில் புகார் செய்து ஒப்படைத்தனர்.
புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் பிரபாகரன், தன்ராஜ் ஆகிய 2 வாலிபர்களை கைது செய்தனர் .மேலும் சுரேஷ் உள்ளிட்ட 2 பேரை தேடி வருகின்றனர். இவர்களிடமிருந்து 6 யூனிட் கிராவல் மண் பறிமுதல் செய்யப்பட்டது.