Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொதுமக்களுக்கு திருநங்கைகள் எவ்வித தொந்தரவும் அளிக்கக் கூடாது. கன்டோன்மென்ட் உதவி ஆணையர் அஜய் தங்கம்.

0

இரவு நேரங்களில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு திருநங்கைகள் எவ்வித தொந்தரவும் தரக்கூடாது மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் திருச்சி மாநகர காவல் துறை உத்தரவு.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சென்னை கே.கே. நகரில் திருநங்கைகளிடம் போலீசார் தகராறில் ஈடுபட்டதாக கூறி மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதுபோன்று நடைபெறாமல் இருக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின்படி திருச்சி கன்டோன்மென்ட் காவல் உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலைய உதவி ஆணையர் அஜய் தங்கம்:-

கடந்த சில நாட்களாக திருநங்கைகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இரவு நேரங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகள் சத்திரம் பேருந்து நிலையம் ,ஜங்ஷன் ,டோல்கேட், பால்பண்ணை உள்ளிட்ட இடங்களில் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை மறைத்து பணம் வாகனங்களை திருடி செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் திருநங்கைகளாக இருந்தாலும் குற்றம் செய்தால் சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்தான்.
குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த மாநகர காவல் துறை பல்வேறு முயற்சிகளை மேற்க்கொண்டு வருகிறது.அதற்கு திருநங்கைகள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகள் அதற்கு மாற்றாக உங்களுக்கு அவரவர் கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு வேலை ஏற்படுத்தித் தருகிறோம்.

தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் அனைத்து உதவிகளும் உங்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும்.எனவே நீங்கள் அனைவரும் காவல்துறைக்கு ஒத்துழைக்கவேண்டும் இதையும் மீறி குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

இந்தக் கூட்டத்தில் திருச்சியில் உள்ள ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.