சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் பாஜக மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு:
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தை பா.ஜனதா முற்றுகை.
திருச்சி பாரதீய ஜனதா கட்சியின் மாநகர் மாவட்டம் சார்பாக சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.
மாநில துணைத்தலைவர் எம்.என்.ராஜா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்:
சொத்து வரியை 150 சதவீதம் வரை உயர்த்தி விட்டு மத்திய பாரதீய ஜனதா அரசு மீது பழியை சுமத்தி தமிழக அரசு தப்பிக்க பார்க்கிறது. சொத்து வரியை வாபஸ் பெறவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன், மாநில இணை பொருளாளர் சிவசுப்பிரமணியன், மாநிலச் செயலாளர் பார்வதி நடராஜன். மாநகர் மாவட்ட பார்வையாளர் லோகிதாசன், புறநகர் மாவட்ட பார்வையாளர் தங்க ராஜைய்யன், பெரம்பலூர் மாவட்ட பார்வையாளர் இல. கண்ணன், மாநில வர்த்தக பிரிவு செயலாளர் எம்.பி.முரளிதரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர் கௌதம், ஸ்ரீராம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஒண்டி முத்து,காளீஸ்வரன், தண்டபாணி, மாவட்ட துணைத்தலைவர்கள் சந்துரு, ஜெயகர்ணா, இந்திரன், மாவட்ட செயலாளர்கள் யசோதன், நாகேந்திரன், மண்டல் தலைவர்கள் தலைவர்கள் புருசோத்தமன், சதீஸ்குமார், மல்லி செல்வம் மற்றும் மாநில, மாவட்ட, அணி, பிரிவு நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட பொது செயலாளர் காளீஸ்வரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மாவட்ட பொதுச்செயலாளர் ஒண்டிமுத்து நன்றி கூறினார்.